அடேங்கப்பா! இவ்வளவு அம்சங்களா? ஜியோபுக் 4ஜி லேப்டாப்
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமானது ஜியோபுக் 4ஜி லேப்டாப் 2023 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஜியோபுக் 4ஜி லேப்டாப்
ரிலையன்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப் இறுதியாக இந்தியாவில் கிடைக்கிறது. இது கடந்த ஆண்டின் அசல் ரிலையன்ஸ் ஜியோபுக்கின் புதிய மறு செய்கையாகும்.
990 கிராம் எடை கொண்ட இந்த ஜியோபுக் 4ஜி லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
மேலும் இதில், 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட், 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, HD வெப்கேமரா ஆகியவை உள்ளன.
என்னென்ன சிறப்பம்சங்கள்
*இரண்டு USB 2.0 போர்ட்கள் உள்ளன. ஒரு மினி-HDMI போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன்/மைக்ரோஃபோன் காம்போ ஜாக் உள்ளன.
*இந்தச் சாதனத்துடன் 4G LTE சிம் மற்றும் இணைப்பிற்காக டூயல் பேண்ட் வைஃபையையும் பயன்படுத்தலாம். வைஃபைக்கு சிம்முக்கு மாறுவது தடையின்றி இருக்கும் என்று ஜியோ கூறியுள்ளது.
* ஜியோபுக், ஒருமுறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
* புதிய ஜியோ லேப்டாப்பில் ஆக்டா கோர் செயலி மற்றும் 4ஜிபி எல்பிடிடிஆர்4 ரேம் பொருத்தப்பட்டுள்ளது. பயனர்கள் அன்றாடப் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்
* ஜியோ தயாரிப்பாக இருப்பதால், JioBook ஆனது Jio TV மற்றும் JioCloud கேம்கள் போன்ற தனியுரிம பயன்பாடுகளுடன் வருகிறது.
* லினக்ஸ் அடிப்படையிலான குறியீட்டு மென்பொருளான JioBIAN மூலம் பயனர்கள் குறியீட்டு மொழிகளையும் (ஜாவா, பைதான் மற்றும் பேர்ல்) கற்றுக்கொள்ளலாம்
* ரிலையன்ஸ் ஜியோபுக் மடிக்கணினியுடன் Digiboxx உடன் 100GB வரை இலவச கிளவுட் சேமிப்பகத்தையும் வழங்குகிறது.
இந்தியாவில் இந்து புதிய ஜியோபுக் மடிக்கணினியில் விலை ரூ.16,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சந்தையில் மிகவும் மலிவு மடிக்கணினிகளில் ஒன்றாகும். அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி விற்பனை தொடங்கும்.
- @reliancejio ने लॉन्च किया लर्निंग बुक #JioBook
— Ambarish Pandey (@pandeyambarish) July 31, 2023
- कंपनी ने इसकी कीमत ₹16499 रखी है
- 5 अगस्त से @RelianceDigital और @amazonIN समेत ऑफलाइन स्टोर्स पर उपलब्ध होगा@ZeeBusiness @Girijeshk pic.twitter.com/qUKiZAsEWB
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |