ஜார்ஜ் ஃபிலாய்டை கேலி செய்யும் மீமால் வாழ்க்கையை தொலைத்த பிரபல கார் பந்தய சாரதி
அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு பலியான கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிலாய்டை கேலி செய்யும் மீம் ஒன்றால் பிரபல நாஸ்கார் சாரதி காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரேஸ் கார் சாரதி
குறித்த செயலுக்கு அந்த நாஸ்கார் சாரதி வருத்தம் தெரிவித்திருந்தாலும், அவர் மீதான நடவடிக்கையில் இதுவரை எந்த தளர்வும் ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
@getty
அமெரிக்க ரேஸ் கார் சாரதியான நோவா கிராக்சன் என்பவரே இந்த இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார். பொலிஸ் வன்முறைக்கு பலியான ஜார்ஜ் ஃபிலாய்டை கேலி செய்யும் மீம் ஒன்றை சமூக ஊடகத்தில் இவர் லைக் செய்துள்ளார்.
காலவரையின்றி இடைநீக்கம்
இதனையடுத்தே நாஸ்கார் நிர்வாகம் மற்றும் Legacy Motor கிளப் ஆகியவை நோவா கிராக்சன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால், அவரை காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் வைத்துள்ளதாக நாஸ்கார் நிர்வாகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
2020ல் பொலிஸ் விசாரணையின் போது கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 9.5 நிமிடங்கள் கால் முட்டை அழுத்தியதால் அவர் மரணமடைந்துள்ளார். ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் உலகம் முழுவதும் கொந்தளிப்பையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |