அதிரடியாக 75 ரன் விளாசிய நட்சத்திர வீரர்! ஆட்டமிழக்காமல் வெற்றி பெற்றுத் தந்த கேப்டன்
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வீரர் ஜார்ஜ் முன்சே 75 ஓட்டங்கள் விளாசினார்.
ஜார்ஜ் முன்சே
துபாயில் ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது.
இன்றைய முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர் ஹாரிஸ் (0), பிரண்டன் மெக்முல்லன் (1), பேரிங்டன் (7) அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
5️⃣0️⃣ in the bag ?
— Cricket Scotland (@CricketScotland) March 11, 2024
Keep going, Muns ?#FollowScotland pic.twitter.com/uZ2cO5KHhG
எனினும், தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே (George Munsey) அதிரடியாக அரைசதம் விளாசினார். அவரது ஆட்டத்தினால் அணி சரிவில் இருந்து மீண்டது.
ஸ்டம்பை பார்க்காமல் தோனியை விட மிரட்டலாக ரன்அவுட் செய்த விக்கெட் கீப்பர்! மிரண்டுபோன இலங்கை வீரர் (வீடியோ)
மைக்கேல் லீஸ்க் 19 (15) ஓட்டங்களும், ஜார்விஸ் 21 (19) ஓட்டங்களும் எடுக்க, ஆர்யன் கான் ஓவரில் முன்சே ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் குவித்தார்.
அணித்தலைவர் வசீம்
பின்னர் சித்திக் பந்துவீச்சில் கிரேவ்ஸ், வாட் இருவரும் டக் அவுட் ஆகினர். இறுதியில் ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் குவித்தது. சித்திக் 4 விக்கெட்டுகளும், ஆர்யன் கான் மற்றும் பசில் ஹமீட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
We end our innings on 147-8 ?
— Cricket Scotland (@CricketScotland) March 11, 2024
Solid knock from Muns with 75(49) ??
It’s all to play for…
Watch live on SportsEye Facebook or YouTube ?#FollowScotland pic.twitter.com/hktjWP3DAZ
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஐக்கிய அமீரக அணியில் முகமது வசீம் மற்றும் டானிஷ் சூரி அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
டானிஷ் சூரி 37 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அலிஷான் ஷராஃபு 32 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். எனினும் அணித்தலைவர் வசீம் 43 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
— UAE Cricket Official (@EmiratesCricket) March 11, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |