கைதி எண் P01135809... சிறை உடையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்: வரலாறு படைக்கும் புகைப்படம் வெளியானது
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சரணடைந்துள்ளார்.
சிறை உடையில் ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
கைதுக்கு பின்னர் சிறை உடையில் முதல் முறையாக ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் புகைப்படம் வெளியானது. அட்லாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் பெற 200,000 டொலர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
@AP
தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நீதியின் கேலிக்கூத்து என்று டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். குற்றவியல் வழக்கில் கடந்த ஐந்து மாதங்களில் இது நான்காவது முறையாக கைதாகியுள்ளார்.
ஆனால் கைதியின் உடையில் முதல்முறையாக அவரது புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் பல்வேறு சூழலில் பிரபலங்கள் பலர் கைதாகி சிறை உடையில் புகைப்படம் வெளியானவர்கள் பட்டியலில் தற்போது டிரம்பும் இணைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
@getty
மேலும், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சவால் விடும் வகையில் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் வரிசையில் அவர் முன்னணியில் இருப்பதால் அவருக்கு எதிரான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கைதி எண் P01135809
குற்றவாளி என புகார் பதிவு செய்யப்பட்ட முதல் முன்னாள் அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி இவர் என்றே கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் ஃபுல்டன் கவுண்டி சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்த டொனால்டு டிரம்ப். சுமார் 20 நிமிடங்கள் மட்டும் சிறையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிறையின் இணைய பக்கத்தில் அவரது புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. மேலும், கைதி எண் P01135809 என குறிப்பிட்டுள்ளனர்.
@getty
200,000 டொலர் தொகையில் ஜாமீனில் வெளிவந்த டிரம்ப், மீண்டும் தெரிவிக்கையில், அது முறைகேடான தேர்தல், திருடப்பட்ட தேர்தல் முடிவு என தெரிவித்துள்ளார். அத்துடன் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் கட்டுக்கதை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Credit: Fulton County Sheriff’s Office
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |