நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம்
Georgia couple describes the moment survive nepal flood: ஜார்ஜியாவைச் சேர்ந்த தம்பதி நேபாள வெள்ளத்திலிருந்து தப்பித்தது குறித்து விவரித்துள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் மயிரிழையில் உயிர்தப்பியது குறித்து ஜார்ஜியாவைச் சேர்ந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
கைலாஷ் மலைக்கு பயணம்
ஜார்ஜியாவைச் சேர்ந்த மீதா மற்றும் ஹேமந்த் பரிக் என்ற தம்பதி, திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கு பயணம் மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தங்களது பயணத் திட்டத்தில் திடீரென ஒரு மாற்றத்தை செய்தனர். அதனைத் தொடர்ந்து, தங்கும் விடுதிக்கு அவர்கள் திரும்பியபோது அந்த கட்டிடம் இடிபாடுகளுடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், பல குடும்பங்கள் மற்றும் பயணக் குழுவின் வழிகாட்டிகள் அனைவரும் காணாமல் போனதையும் அவர்கள் அறிந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானது பின்னர் அவர்களது தெரிய வந்துள்ளது.
அதிகாரிகளின் தகவலின்படி, குறைந்தது 1,400 பேர் உயிரிழந்துள்ளனர்; 5000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. காணாமல்போனவர்களில் குறைந்தது 85 பேர் அமெரிக்கக் குடிமக்கள் ஆவர்.
தாங்கள் உயிர்த் தப்பியது குறித்து மீதா கூறுகையில், "கண்களை மூடினாலே கைலாஷும் அந்த மக்களும்தான் என் கண்முன் வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? அப்படியென்றால், இதற்கு பின்னால் ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா?" என்றார்.
