ஜோர்ஜியா குடியரசு தலைவரின் அதிரடி முடிவு: நாடாளுமன்ற வாசலில் குவியும் போராட்டக்காரர்கள்
ஐரோப்பியாவுடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்ததை அடுத்து ஜோர்ஜியா நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.
கைவிடப்பட்ட ஐரோப்பிய ஒருங்கிணைவு
ஐரோப்பிய ஒருங்கிணைவை ஜோர்ஜியா அதிகாரப்பூர்வமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஜோர்ஜியாவின் பிரதமர் இராக்லி கோபாகிட்ஸே( Irakli Kobakhidze) தெரிவித்துள்ளார், அதில் ஜோர்ஜியா 2028ம் ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையை மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
⚡️⚡️ BREAKING: Georgia has officially renounced European integration
— NEXTA (@nexta_tv) November 28, 2024
Georgia refuses from negotiations on accession to the EU until 2028. This was announced by Prime Minister Irakli Kobakhidze.
Today, the European Parliament adopted a resolution that does not recognize… pic.twitter.com/QOLbGf5MoM
இதற்கிடையில், ஜோர்ஜிய நாடாளுமன்ற முடிவுகள் மீது அங்கீகரிக்காத தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டு இருப்பதுடன், “ஜோர்ஜிய கனவு” தலைவர்கள் மீதான பொருளாதாரத் தடைகளையும் கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தை சூழ்ந்த பொதுமக்கள்
அதே சமயம் ஜோர்ஜியா ஜனாதிபதி சலோமி ஜுராபிஷ்விலி தன்னை நாட்டின் நிரந்தர தலைவராக அறிவித்துள்ளார்.
அத்துடன் ஜோர்ஜியாவின் ஒரே பிரதிநிதியாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரே உரிமை தனக்கு மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
The number of protesters in front of the Georgian Parliament increases
— NEXTA (@nexta_tv) November 28, 2024
Meanwhile, Georgian President Salome Zurabishvili has declared herself the only legitimate representative of power in the country.
“Today I am the only legitimate institution in this country, the only… pic.twitter.com/HSsZ8wry81
மேலும் தன்னுடைய இறுதி வரை தான் மட்டும் தான் நாட்டின் தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பாவுடன் இணைவது தொடர்பான முடிவு மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளின் முடிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திபிலிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு திரண்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |