உக்ரைனுக்காக ரஷ்யர்களுடன் சண்டையிடும் ஜார்ஜியர்கள்! வீடியோ ஆதாரம்
உக்ரைனில் ரஷ்யர்களுக்கு எதிராக ஜார்ஜியர்கள் சண்டையிடும் வீடியோ காட்சிகள் யூடியூப்-ல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவின் மார்க்ஸ்மேன் குழு அதன் யூடியூப் பக்கத்தில் குறித்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
மார்க்ஸ்மேன் குழு உக்ரைனில் ஆயுதமேந்தி ரஷ்ய படைகளுக்கு எதிராக மோதலில் ஈடுபடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.
உக்ரைனின் சர்வதேச படைப்பிரிவில் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக ஜார்ஜியாவின் மார்க்ஸ்மேன் குழு மோதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
எனினும், வீடியோவில் இருக்கும் மார்க்ஸ்மேன் குழு வீரர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் எந்த பகுதியில் அவர்கள் ரஷ்யர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
முன்னதாக, சர்வதேச நாடுகளில் உள்ள தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு பயணித்து உக்ரைன் படைகளுடன் இணைந்து ரஷ்யா படைகளுக்கு எதிர்த்து போராடுமாறு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.