அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி: 156 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்
Gerhard erasmus smash 156 runs vs ireland: நமீபியாவின் அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எராஸ்மாஸ் நமீபிய அணிக்கு எதிராக 156 ஓட்டங்கள் விளாசினார்.
வின்ட்ஹோக்கில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 156 ஓட்டங்கள் விளாச நமீபியா 321 ஓட்டங்கள் குவித்தது.
முதல் பந்திலேயே டக்அவுட்
நமீபியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வின்ட்ஹோக்கில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய லௌரன் ஸ்டீன்காம்ப் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். பின்னர் மைக்கேல் வான் லிஜென் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து கைகோர்த்த ஜென் ஃப்ரைலிங்க், அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் கூட்டணி விரைவாக ஓட்டங்களை சேர்த்தது.
சதம் விளாசிய எராஸ்மஸ்
அணியின் ஸ்கோர் 166 ஆக உயர்ந்தபோது, ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 76 ஓட்டங்களில் (2 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். ஃப்ரைலிங்க், எராஸ்மஸ் கூட்டணி 117 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப, எராஸ்மஸ் அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். சதம் விளாசிய எராஸ்மஸ், ஆட்டமிழக்காமல் 125 பந்துகளில் 156 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் நமீபியா அணி 321 ஓட்டங்கள் குவித்தது. கேவின் ஹோய் 3 விக்கெட்டுகளும், ஜெய் மூன்ரா, பைரோன் மற்றும் கேம்பர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
