அதிரடி அரைசதம் விளாசிய திலக் வர்மா; த்ரில் வெற்றி பெற்ற இந்தியா
tilak varma half century lead india won by 4 wickets vs new zealand in 2nd t20i: நியூசிலாந்திற்கு எதிரான 2வது T20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரைசதம் விளாசி திலக் வர்மா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியாவுக்கு 181 ஓட்டங்கள் இலக்கு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.
டிம் செய்பெர்ட் 7 ஓட்டங்கள், டேர்ல் மிட்செல் 6 ஓட்டங்கள், ஃபின் ஆலன் 16 ஓட்டங்கள் என அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், நியூசிலாந்து அணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் மற்றும் பெவோன் ஜேக்கப்ஸ் நிதானமாக ஆடி அணியின் ஓட்டங்கள் உயர்த்தினர்.
கிளென் பிலிப்ஸ் 70 ஓட்டங்களும், பெவோன் ஜேக்கப்ஸ் 58 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியா வெற்றி
181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சம்சன் 14 ஓட்டங்களிலும், அபிஷேக் சர்மா 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 4 ஓட்டங்கள், அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 7 ஓட்டங்கள் என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, அக்சர் படேலும் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் 70 ஓவர்களுக்கு 5 விக்கெட் என இந்திய அணி தடுமாறியது.
அதன் பின்னர் திலக் வர்மா அதிரடியாக ஆடி 51 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

அவருக்கு துணையாக நமன் தீர் 31 ஓட்டங்களும், நிதிஷ் குமார் ரெட்டி 26 ஓட்டங்களும் குவித்தனர்.

19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்க்கு 181 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில், மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
3வது T20 போட்டி அக்டோபர் 27 அன்று வெல்லிங்டனில் நடைபெற உள்ளது.