ஜேர்மனி தாக்குதல்கள் எதிரொலி... சில நாட்டவர்கள் நாடுகடத்தல்
ஜேர்மன் நகரமொன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனி அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட நாட்டவர்களை நாடுகடத்துவதை மீண்டும் துவக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
சில நாட்டவர்களை நாடுகடத்த ஜேர்மனி முடிவு
ஜேர்மனியிலுள்ள Solingen நகரில், உள்ளூர் விழா ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்தார்கள். தாக்குதல் நடத்தியவர் சிரியா நாட்டவர்.
அத்துடன், ஜூன் மாதத்தில், ஆப்கன் நாட்டவர் ஒருவர், ஜேர்மன் பொலிசார் ஒருவரைக் கத்தியால் குத்தியதில் அந்த பொலிசார் உயிரிழந்தார்.
இந்நிலையில், குற்றப்பின்னணி கொண்ட ஆப்கன் நாட்டவர்களை நாடுகடத்துவதை மீண்டும் துவக்கியுள்ளது ஜேர்மனி.
இன்று அதிகாலை, ஆப்கன் குற்றவாளிகள் 28 பேருடன் விமானம் ஒன்று Leipzig நகரிலிருந்து காபூலுக்குச் சென்றுள்ளது.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் தொடர்பிலான சந்தேகம் காரணமாக அந்நாட்டவர்களை நாடுகடத்துவதை ஜேர்மனி நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |