வெளிநாடொன்றில் காணாமல்போய் மீட்கப்பட்ட ஜேர்மன் இளம்பெண்ணின் செய்தி
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று காணாமல்போன ஜேர்மன் இளம்பெண்ணொருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
மாயமான ஜேர்மன் இளம்பெண்
ஜேர்மானியரான கரோலினா Carolina Wilga, 26) என்னும் இளம்பெண், மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
ஜூன் மாதம் 29ஆம் திகதி, கரோலினா Beacon என்னும் நகரிலுள்ள கடை ஒன்றில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதற்குப் பின் அவரைக் காணவில்லை.
சுமார் 12 நாட்கள் அலைந்து திரிந்து உறையவைக்கும் குளிரில் அவதியுற்று கொசுக்கடி தாங்காமல் தவித்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுமக்களில் ஒருவர் கரோலினைக் கண்டுபிடித்துள்ளார்.
காப்பாற்றியவர்களுக்கு நன்றி
இந்நிலையில், Perth நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் கரோலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
German backpacker, Carolina Wilga, who was missing for 12 days in Western Australia's outback, has expressed heartfelt gratitude to Australia as she recovers in a Perth hospital.
— 10 News Perth (@10NewsPER) July 14, 2025
In a statement released by WA Police on Monday, Ms Wilga reflected on the experience and the… pic.twitter.com/jdvTcWTc70
அந்த அறிக்கையில், தன்னைத் தேட உதவிய அவுஸ்திரேலியர்களுக்கும், தன்னைக் காப்பாற்றியவர்களுக்கும் தான் மனதார நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார் கரோலின்.
மேலும், தனது காரில் உணவு, உடை என அத்தியாவசியப் பொருட்கள் இருந்தும், தான் காரை விட்டுவிட்டு நடந்து வந்தது ஏன் என பலரும் யோசிக்கலாம் என்று கூறியுள்ள கரோலின், தனது கார் சரிவொன்றில் கட்டுப்பாடிழந்து வேகமாகச் செல்லும்போது, தனது தலையில் அடிபட்டதாகவும், அதனால் குழப்பம் ஏற்பட்டதால்தான் தான் காரை விட்டுவிட்டு நடந்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் கரோலின்.
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 11ஆம் திகதி, சாலையோரமாக நடந்துகொண்டிந்தபோது Tania Henley என்னும் விவசாயியைப் பார்த்து கரோலின் கையை ஆட்ட, அவர்தான் இவரை மீட்டுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |