தண்ணீர் சேர்த்தால் போதும், பீர் ரெடி! ஜேர்மன் மதுபான ஆலையின் புது முயற்சி
உலகின் முதல் தூள் பீரை (powdered beer) ஜேர்மன் மதுபான ஆலை உருவாக்கியுள்ளது.
இன்ஸ்டன்ட் காபி தூள் போல இன்ஸ்டன்ட் பீர் தூள் இருந்தால் எப்படி இருக்கும் எம நினைத்து பார்த்துள்ளீர்களா? இன்னும் சில காலத்தில் அப்படி ஒன்று பலரது வீட்டில் சாதாரணமாக இருக்கலாம்.
தண்ணீரை நொடிகளில் பீராக மாற்றலாம்
நீங்கள் ஒரு பீர் விரும்பியாக இருந்தால், உங்களுக்கு இது மிகவும் பிடிக்கலாம். ஏனென்றால் ஒரு ஜேர்மன் மதுபான ஆலை, சாதாரண தண்ணீரை நொடிகளில் பீராக மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளது.
Twitter @ChinaDaily
ஜேர்மன் மதுபான ஆலை
கிழக்கு ஜேர்மனியில் உள்ள Klosterbrauerei Neuzelle எனும் மதுபான ஆலை தான் இந்த பீர் தூளை தயாரித்துள்ளது. இதன்மூலம், பீர் ஏற்றுமதிக்கான பயணத்தில் ஏற்படும் அதிக கார்பன் வெளியீட்டை குறைக்க முடியும் என இந்த நிறுவனம் நம்புகிறது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு கிளாஸில் சில ஸ்பூன் பீர் பொடியைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் ஒரு கிளாஸ் பீர் ரெடி.
தூள் பீர் அதன் வளர்ச்சியின் கடைசி கட்டத்தில் உள்ளது. இப்போதைக்கு இது ஆல்கஹால் இல்லாதது என்பது குறிப்பித்தக்கது. ஆனால் இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த ஆண்டின் (2023) இறுதிக்குள் சந்தைக்கு தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது.
? A brewery in Eastern Germany has developed a beer in powder form to reduce the heavy carbon footprint of beer exports pic.twitter.com/YpddYqs7vt
— Reuters (@Reuters) March 21, 2023
நன்மைகள்
இந்த பீர் பவுடர் புழக்கத்திற்கு வந்தால், தண்ணீர், போத்தல்கள் போன்ற பல பொருட்கள் தேவைப்படாமல் போகலாம், மேலும் எடை குறையும் என்பதால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும்.
இது, ஜேர்மனிக்கு மட்டும் CO2 உமிழ்வில் 3 முதல் 5 சதவீதத்தை சேமிக்க முடியும் என்று அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
Twitter @ChinaDaily