ஜேர்மனியில் சாலையில் நடந்த பயங்கர விபத்து: 4 பிரித்தானிய சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!
ஜேர்மனியில் நடந்த சாலை விபத்தில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 பிரித்தானியர்கள் உயிரிழப்பு
ஜேர்மனியின் ஹெஸ்ஸி(Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.
இந்த கார் விபத்தில் இரண்டு தம்பதிகள் உட்பட நான்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நள்ளிரவுக்கு பின் நடந்த இந்த கார் விபத்து சம்பவத்தில், சாலையில் இருந்து கார் விலகி சென்று 30மீ தொலைவில் உள்ள மரத்தில் மோதியது.
இதையடுத்து, விபத்தில் சிக்கியவர்களில் ஒருவருடைய செல்போனில் இருந்து தானாக அவசர சேவைகளுக்கு அழைப்பு சென்றுள்ளது.
அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் பிற அவசர சேவைகள் பாதிக்கப்பட்டவர்கள் மீட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், பிரித்தானிய அதிகாரிகள் உதவிக்காக இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |