ஜேர்மனியில் அரங்கேறிய பயங்கர வெடிப்பு: விசாரணையை முடுக்கி விட்ட பொலிஸார்
மத்திய கொலோனில் நடந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மனியில் வெடிப்பு
திங்கட்கிழமை முற்பகுதியில் மத்திய கொலோனில்(central Cologne) ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக ஜேர்மன் பொலிஸார் மற்றும் வழக்கறிஞர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பொலிஸ் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், இதில் பயங்கரவாதிகளின் எந்தவொரு தூண்டுதலும் இருப்பதற்கான சந்தேக கூறுகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வெடிப்புக்கு காரணமாக அமைய கூடிய அனைத்து விதமான வழிகளையும் விசாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் வெடிப்பு காரணமாக Hohenzollernring ring சாலையில் உள்ள தனியார் சொத்தில் ஏற்பட்ட சேதத்தில் பார்வையாளர் ஒருவர் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் மேற்கு நகரில் உள்ள Vanity என்ற இரவு நேர கிளப்பில் பாதிப்புகள் தெளிவாக தெரிந்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |