உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை தடுத்த ஜேர்மன் சான்சலர்! போட்டுடைத்த பில்ட்
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குதை ஜேர்ன் சான்சலர் ஓலாஃப் ஷோட்ஸ் தடுத்ததாக அந்நாட்டு சிறுபத்திரிகையான பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது 57வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கார்கிவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா போரை தொடங்கிய நாள் முதல், தங்கள் நாட்டிற்கு ஆயுதங்கள் தந்து உதவுமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்.
ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
தாக்குதல் நடத்தாதீர்கள்... ரஷ்ய ராணுவத்திற்கு புடின் திடீர் உத்தரவு
இந்நிலையில், மார்ச் மாதத்தில் ஜேர்மனியிடம் சிறுத்தை டாங்கிகளையும், பூமா, மார்டர், பாக்ஸர் மற்றும் ஃபுச்ஸ் ராணுவ வாகனங்களையும் உக்ரைன் கோரியதாக பில்ட் தெரிவித்துள்ளது.
எனினும், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோட்ஸ் கனரக ஆயுதங்களை வழங்குவதைத் தடுத்தார் என பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.