தாக்குதல் நடத்தாதீர்கள்... ரஷ்ய ராணுவத்திற்கு புடின் திடீர் உத்தரவு
மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்கும் திட்டத்தை கைவிடுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் துருப்புக்கள் இருக்கும் மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu-க்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாறாக, ‘ஒரு ஈ’ கூட க கடந்து செல்ல முடியாதபடி, அது பாதுகாப்பாக சுற்றி வளைக்குமாறு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் எஃகு ஆலையை விட்டு வெளியேறுபவர்களின் உயிருக்கு ரஷ்யா உத்தரவாதம் அளிக்கிறது என்றும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்றும் புடின் கூறியுள்ளார்.
269 உயிர்களை காவு வாங்கிய கொடூரத் தாக்குதலுக்கு இன்னும் நீதியில்லை! சங்கக்காரா வேதனை
மரியுபோல் எஃகு ஆலையை சுமார் 2000 உக்ரேனிய ராணுவ வீரர்கள் பதுங்கியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தெரிவித்திருந்தார்.
மேலும், 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலைக்குள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.