ஜேர்மன் ஜனாதிபதி சீனாவுக்கு சுற்றுப்பயணம்: ரோபோக்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு
ஜேர்மன் நாட்டு ஜனாதிபதிக்கு சீனாவில் ரோபோக்கள் உற்சாக வரவேற்பு அளித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவுக்கு சுற்றுப்பயணம்
ஜேர்மன் நாட்டு ஜனாதிபதி பிரெட்ரிச் மெர்ஸ் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.
அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து ஜேர்மனி ஜனாதிபதி பிரெட்ரிச் மெர்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளிடையே சில முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உலகின் முக்கியமான பிரச்சனைகளை சீனாவின் ஒத்துழைப்பு இல்லாமல் தீர்க்க முடியாது, உக்ரைன் - ரஷ்யா போரை தீர்க்கவும் சீனாவின் ஒத்துழைப்பு தேவை என்று ஜேர்மன் ஜனாதிபதி பிரெட்ரிச் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
ரோபோக்கள் வரவேற்பு
சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரெட்ரிச் மெர்ஸ் அங்குள்ள யுனிட்ரீ ரொபொடிக்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை பார்வையிட்டார்.
அப்போது அங்கு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த மனித ரோபோக்கள் சிறப்பாக நடனமாடி வரவேற்றன.
அத்துடன் அவை குத்துச்சண்டை மற்றும் குங்பூ சண்டை காட்சிகளை செய்து காட்டின.
பின்னர் ரோபோக்களின் தொழில்நுட்ப விவரம் குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி பிரெட்ரிச் மெர்ஸ் அந்த நிறுவனத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |