மூன்றரையாண்டுகளாக பிள்ளைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த ஜேர்மன் தம்பதியர் கைது
ஸ்பெயின் நாட்டில் மூன்றரையாண்டுகளாக தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குள் அடைத்துவைத்திருந்த ஜேர்மன் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மன் தம்பதியர் கைது
ஸ்பெயின் நாட்டிலுள்ள Oviedo நகரில், ஜேர்மானியரான 53 வயது ஆண் ஒருவரும், ஜேர்மன் மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட 48 வயது பெண் ஒருவரும், தங்கள் மூன்று பிள்ளைகளுடன் வீடு ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்துள்ளனர்.

கனடா அமெரிக்க எல்லையில் 3 மில்லியன் டொலர் போதைப்பொருள் சிக்கியது: ட்ரம்பின் குற்றச்சாட்டு உண்மைதானா?
அவர்களுடைய பிள்ளைகளான ஒரு 10 வயது சிறுவனும், 8 வயது இரட்டைக் குழந்தைகளும் என மூன்று பையன்களும் 2021ஆம் ஆண்டிலிருந்தே வீட்டை விட்டு வெளியேறியதில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது, அந்த வீட்டு குப்பை கூளங்களால் நிறைந்துள்ளதையும், பிள்ளைகள் கூண்டு போன்ற கட்டில்களில் தூங்கவைக்கப்படுவதையும் கண்டுள்ளனர். அத்துடன், பிள்ளைகளுக்கு எப்போதும் மாஸ்கும் டயப்பர்களும் அணிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் அந்தப் பையன்களை மீட்டு வீட்டுக்கு வெளியே கொண்டுவந்ததும், தாங்கள் இதுவரை சுத்தக்காற்றை சுவாசித்ததே இல்லை எனபதுபோல ஆழ்ந்த மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார்களாம் அந்தப் பையன்கள்.
தற்போது அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பையன்கள் மூவரும் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் ஜேர்மனியில் எந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய பெயர்கள் என்ன என்பது போன்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |