ஸ்பெயினில் 3 ஆண்டுகளாக குழந்தைகளை சிறை வைத்த ஜேர்மன் தம்பதி கைது!
ஸ்பெயினில் 3 ஆண்டுகளாக குழந்தைகளை மோசமான வீட்டில் அடைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஜேர்மனை சேர்ந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை மோசமான வீட்டில் அடைத்த தம்பதியினர்
ஸ்பெயினின் வடமேற்கு அஸ்டூரியாஸ் பகுதியில், ஜேர்மன் தம்பதியினர் மூன்று இளம் குழந்தைகளை சிதலமடைந்த வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக சிறை வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்கள் இந்த வீட்டை "திகில் வீடு" என்று வர்ணித்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்துறையினர், எட்டு வயது இரட்டை குழந்தைகள் மற்றும் பத்து வயது குழந்தை என மூன்று குழந்தைகளும் கடுமையான புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
அவர்களுக்கு முறையான கல்வி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் குப்பை கூளங்கள் நிறைந்த சுகாதாரமற்ற சூழ்நிலையில் வசித்து வந்துள்ளனர். குழந்தைகளுக்கு நடந்த இந்த கொடுமையான சம்பவம் பெரும் வேதனையை அளிக்கிறது.
பொலிஸார் சோதனை
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அளித்த சந்தேகத்திற்கிடமான தகவலின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், பள்ளியில் சேராத மூன்று குழந்தைகளும் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தொற்று நோய் அச்சம் காரணமாக அவர்கள் குழந்தைகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்களில், குழந்தைகள் டயப்பர்கள் அணிந்திருந்ததாகவும், ஒவ்வொருவரும் பல அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் மீட்கப்பட்ட பின்னர், உடனடியாக மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் குழந்தைகள் நல மையத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டனர்.
அவர்களின் உடல் மற்றும் மனநலன் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |