சிலரை நாடுகடத்துவது மனிதத்தன்மையற்ற செயல் அல்ல: புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பு
புலம்பெயர்ந்தோர் இருவரை நாடுகடத்துவது தொடர்பாக ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை அளித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பு
காசாவில் பிறந்த ஒரு 34 வயது நபரும், 32 வயது சோமாலியா நாட்டவர் ஒருவரும் கிரீஸ் நாட்டில் புகலிடம் கோரியிருந்தார்கள்.
பிறகு அவர்கள் ஜேர்மனியில் புகலிடம் கோரினார்கள். அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகள் ஜேர்மனியில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பான வழக்கு ஜேர்மனியின் ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்துக்கு வந்தது.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த ஃபெடரல் நிர்வாக நீதிமன்றம், இந்த புலம்பெயர்ந்தோர் இருவரையும் கிரீஸ் நாட்டுக்கு நாடுகடத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது.
picture-alliance/NurPhoto/N. Economou
தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்த புலம்பெயர்ந்தோர் கிரீஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்படுவதால், அவர்கள் அங்கு மனிதாபிமானமற்ற அல்லது மோசமான நிலைமையை எதிர்கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார்கள்.
உழைக்கும் உடல் திறன் கொண்ட இளம் ஆண்களால் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறியுள்ள அவர்கள், ஒருவேளை, அத்தியாவசிய ஆவணங்களைப் பெற தாமதம் ஏற்படுவதால் உடனடியாக அரசு உதவி வேண்டுமானால் கிடைகாமல் இருக்கலாம்.
ஆனால், அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம் மற்றும் சுயசுகாதாரத் தேவைகளைப் பெறுவது அவர்களுக்கு கடினமானதாக இருக்காது என்றும் கூறியுள்ளார்கள்.
ஆகவே, அவர்களை கிரீஸ் நாட்டுக்கு நாடுகடத்தலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |