ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள்
ஜேர்மனியில், வாகன சோதனையின்போது பிரித்தானியர் ஒருவர் தப்பியோட முயல, அதிகாரிகள் அவரைத் துரத்திப் பிடித்தனர்.
அவரது சூட்கேஸ்களுக்குள் போதைப்பொருள் ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருந்தது சோதனையின்போது தெரியவந்தது.
தப்பியோட முயன்ற பிரித்தானியர்
கடந்த வாரம், ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவரின் டெக்சியை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.

திடீரென அந்த பிரித்தானியர் தப்பியோட முயல, அதிகாரிகள் அவரைத் துரத்திப் பிடித்துள்ளார்கள்.
அவரது உடைமைகளை அவர்கள் சோதனையிட, அவரது சூட்கேஸ்களுக்குள், உடைகளுக்கு நடுவே 30 கவர்களில் போதைப்பொருள் ஒன்று மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல, மற்றொரு சுங்கச் சோதனையின்போது, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்த நான்கு பார்சல்களில் இருந்த gnomes எனப்படும் தங்க நிற பெயிண்ட் அடித்த பொம்மைகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அவற்றை உற்றுக் கவனித்த சுங்க அதிகாரிகள், பொம்மைகளின் பாதங்களில் ஏதோ மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவரவே, பொம்மைகளை சோதனையிட்டுள்ளனர்.
அந்த பொம்மைகளுக்குள் 25 கிலோகிராம் அளவில் போதைப்பொருள் ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த இரண்டு ஆபரேஷன்களிலும் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் மதிப்பு 2.3 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |