அவசரப்படவேண்டாம்... எரிவாயுக் குழாய் சேதம் தொடர்பில் எச்சரிக்கும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்.
அமெரிக்க தரப்பிலிருந்து வெளியான தகவலால் பரபரப்பு
New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் புடினுடைய எதிரிகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அது வேண்டுமென்றே செய்யபட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord Stream எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக அந்த பத்திரிகை தெரிவித்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைன் தரப்பு மறுப்பும் தெரிவித்திருந்தது.
எச்சரிக்கும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஆனால், எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius.
காரணம், உக்ரைன் மீது பழிபோடுவதற்காக வேண்டுமென்றே இப்படி ஒரு கதையை யாரோ கிளப்பிவிட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்கிறார் அவர்.
அதேபோல, நேட்டோ அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் பொறுப்பிலிருக்கும் Jens Stoltenbergம், எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன, அவை முடியும் வரை அதன் பின்னால் இருப்பது யார் என அவசரப்பட்டு நாம் எதையும் சொல்லாமலிருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
வீடியோவை காண

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.