ஆன்லைன் காதல்: பாகிஸ்தான் இளைஞரை கரம் பிடித்த ஜேர்மன் பெண் மருத்துவர்
ஆன்லைன் விளையாட்டின் போது ஏற்பட்ட காதலை தொடர்ந்து பாகிஸ்தான் இளைஞரை ஜேர்மன் பெண் மருத்துவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் விளையாட்டில் மலர்ந்த காதல்
ஜேர்மனியை சேர்ந்த 26 வயது பெண் மருத்துவர் செல்மா(Selma) என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த 22 வயது முகமது அக்மல்(Muhammad Akmal) என்பவரை Roblox என்ற ஆன்லைன் விளையாட்டு தளத்தில் சந்தித்துள்ளார்.

தொடக்கத்தில் அக்மலுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் செல்மா அனுப்பும் மிக நீண்ட குறுஞ்செய்திகளுக்கு அக்மல் ஓகே(Okay) என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாக தெரிவித்து வந்துள்ளார்.
அக்மல் அனுப்பிய ஓகே என்ற அந்த ஒற்றை வார்த்தையில் இருந்த நேர்மையை கண்டு செல்மா வியப்படைந்துள்ளார்.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் நீடித்த இவர்களின் இணைய வழித் தொடர்பு, அக்மலின் திருமண விருப்பத்தை செல்மா ஏற்க காரணமாக அமைந்துள்ளது.
மேலும் அக்மலை திருமணம் செய்து கொள்வதற்காக ஜேர்மனை சேர்ந்த செல்மா பாகிஸ்தானின் மண்டி பகாவுதீன் மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ளார்.
இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்
செல்மா -அக்மல் திருமணத்திற்கு இருவீட்டாரும் முழுச் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவரும் பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்டதோடு, பாகிஸ்தானிலேயே தங்கி வாழ தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் கிராம வாழ்க்கை சிரமமாக இருந்தாலும், தனது கணவருடன் இருப்பது மகிழ்ச்சி தருவதாக செல்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |