ஜேர்மனி தேர்தல் முடிவுகள்: வெற்றிகொண்டாட்டங்களும் ராஜினாமாவும்
ஜேர்மனியின் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஜேர்மன் சேன்சலர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட அரசியல்வாதியே வெற்றிபெற்றுள்ளார்.
அத்துடன், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியும் எதிர்பார்த்ததுபோலவே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஜேர்மன் தேர்தல் முடிவுகள்
ஜேர்மன் சேன்சலர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரெட்ரிக் மெர்ஸின் CDU/ CSU கட்சி, 208 இருக்கைகளைப் பெற்றுள்ளது. அது 28.6 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD 151 இருக்கைகளைப் பெற்றுள்ளது. அது 20.8சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது.
ஜேர்மன் சேன்ஸரான (ஓலாஃப் ஷோல்ஸின் SPD கட்சிக்கு 121 இருக்கைகள் கிடைத்துள்ளன. அக்கட்சி 16.4 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது.
ஆட்சியில் இடம்பெற்ற Greens கட்சிக்கு 85 இருக்கைகளும், The Left (Die Linke) கட்சிக்கு 64 இருக்கைகளும், BSW கட்சிக்கு 5 இருக்கைகளும் கிடைத்துள்ளன.
பிரெட்ரிக் மெர்ஸ் ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலராக பதவியேற்க இருக்கும் நிலையில், FDP கட்சி 5 சதவிகித வாக்குகளைக் கூட பெறாததால், அக்கட்சியின் தலைவரான Christian Lindner தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |