ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து
ஜேர்மனியின் சேன்சலர் பதவிக்கான தேர்தலில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியில் தேர்தல்
ஜேர்மனியில் புதிய சேன்சலரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஜேர்மனியின் சேன்சலர் பதவிக்கான தேர்தலில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி வெற்றி பெறும் எனவும், அதன் தலைவர் தலைவர் பிரெடெரிக் மாட்ஸ் (Friedrich Merz) ஜேர்மனியின் புதிய சேன்சலராக பதவியேற்பார் எனவும் தெரியவந்துள்ளது.
கருத்துகணிப்புகளின் படி, பிரெடெரிக் மாட்ஸ் (Friedrich Merz) தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU/CSU) கூட்டணி தேர்தலில் 28.9% வாக்குகளையும், தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்று (Alternative for Germany (AFD) 19.9% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து எதிர்க் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது.
ஜேர்மனியின் தற்போதைய சேன்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மைய-இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி(SPD) 16% வாக்குகளுடன் 3வது இடம் பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஓலாஃப் ஸ்கோல்ஸ் வாழ்த்து
ஜேர்மனியின் சேன்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெடெரிக் மாட்ஸ் (Friedrich Merz) வெற்றி உறுதியானதை தொடர்ந்து, சேன்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின்(Olaf Scholz) தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெடெரிக் மாட்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது மைய-இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியினருக்கு(SPD) கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Election 2025, German Elections 2025