ஜேர்மன் சேன்ஸலர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: தலை தப்புமா?
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் சேன்ஸலர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தனது நிதி அமைச்சரான Christian Lindnerஐ பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து, அவர் சார்ந்த Free Democrats (FDP) கட்சி ஷோல்ஸுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்ப பெற்றதால், அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில், இன்று ஷோல்ஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.
ஆனால், அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைவாரானால், பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |