அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி
German firms eye Africa as global trade shocks hit traditional markets: பாரம்பரிய சந்தைகள் ஏமாற்றமளித்துவருவதால் புதிதாக ஒரு நாட்டின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பத் துவங்கியுள்ளது ஜேர்மனி.
அமெரிக்கா, வரி மேல் வரியாக போட்டுக்கொண்டே இருக்கிறது, பாரம்பரிய சந்தைகளான சீனா போன்ற நாடுகளில் போதுமான வளர்ச்சி இல்லை, உக்ரைன், ஈரான் போரால் எரிபொருள் விலைகள் அதிகரித்துவருகின்றன.
ஆக, இந்த நாடுகள் எதுவும் வேண்டாம், புதிதாக ஏதாவது ஒரு நாட்டுடன் வர்த்தகம் செய்யலாம் என்னும் நிலையை ஜேர்மனி எட்டி விட்டதுபோல் உள்ளது.
நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி
ஆம், சமீபத்தில் நடைபெற்ற ஜேர்மன் - ஆப்பிரிக்க வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற ஜேர்மன் தொழில் துறையினரும், அரசியல்வாதிகளும், அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்று கூறியுள்ளார்கள்.

அவர்கள் குறிப்பிடும் அந்த நாடு, ஆப்பிரிக்கா!
நீண்ட காலமாக, ஜேர்மானிய நிறுவனங்கள் பல, வட அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள முக்கிய ஏற்றுமதி சந்தைகளிலிருந்து ஒரு நிலையான வருவாய் ஆதாரத்தைக் கொண்டிருந்தன.
ஆனால், நமது காலத்தின் புவிசார் அரசியல் பிளவுகள் அந்த உறுதியைச் சிதைத்துவிட்டன என்கிறார், ஜேர்மன் ஜனாதிபதியான ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மேயர்.

புதிய எல்லைகளை நோக்கிய தருணம் இது என்றும், நமக்காக காத்திருக்கும் பொருளாதார வாய்ப்புகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறலாம் என்றும் கூறியுள்ளார் அவர்.
அதாவது, வட அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது செலுத்திவந்த கவனத்தை இனி ஆப்பிரிக்கா மீது செலுத்தலாம் என்கிறார் அவர்.
ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகள், மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சில நாடுகளாக மாறிவருகின்றன.
ஐரோப்பா மற்றும் பிற முன்னேறிய நாடுகளில், உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை குறைவைச் சந்தித்து வரும் வேளையில், அடுத்த சில பத்தாண்டுகளில் ஆப்பிரிக்கா நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களை உருவாக்கும் என்றும், எதிர்காலத் தொழிலாளர்களின் முக்கிய ஆதாரமாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியும், தனது நாட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க உதவும் வகையில், திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஏற்கனவே கென்யாவுடன் ஒரு புலம்பெயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதுடன், கானாவுடனும் அதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆப்பிரிக்கா உலகின் மிகவும் ஏழ்மையான பிராந்தியங்களில் ஒன்றாகத் தொடர்ந்தாலும், கடந்த மூன்று தசாப்தங்களாக அந்நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, ஒரு பெரிய மற்றும் செல்வந்த நுகர்வோர் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தரப்பினர், உயர் இலக்குகளைக் கொண்டவர்களாகவும், கார்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை, ஜேர்மானிய நிறுவனங்கள் விற்க விரும்பும் பல பொருட்களுக்கான தேவையின் வளர்ந்து வரும் ஆதாரமாகவும் உள்ளனர்.
தனது கனிம வளம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் காரணமாக, அத்தியாவசிய மூலப்பொருட்களின் ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும், சீனா மீதான சார்பைக் குறைக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மையமாக ஆப்பிரிக்கா விளங்குகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து பெரும்பாலான எரிசக்தி இறக்குமதிகளை படிப்படியாக நிறுத்திய பின்னர், அதன் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் அது முக்கியப் பங்காற்றி வருகிறது.
இதற்கிடையில், ஜேர்மன் ஜனாதிபதி உட்பட தொழில் துறைத் தலைவர்கள் பலர், ஜேர்மன் வணிக நிறுவனங்கள், ஆப்பிரிக்காவில் அதிக ரிஸ்க் எடுத்தாவது வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர்.
இல்லையெனில், நமக்கு போட்டியாக வெளிநாடுகள் முந்திக்கொள்ள, நாம் ஓரங்கட்டப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள். ஆக, ஆர்வம் கொள்ளுங்கள், ரிஸ்க் எடுங்கள், நமது பொதுவான எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள் என்கிறார் ஸ்டெய்ன்மேயர்.