ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட ஜேர்மனி? வெளியுறவு அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை
ஜேர்மனி ரஷ்யாவுடன் இணைந்து போரில் ஈடுபட்டதாக ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.
சர்ச்சை கருத்து
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா செவ்வாயன்று நடந்த விவாதத்தின்போது, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுகின்றன என்றும், உக்ரைனை பாதுகாக்க இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், ஐரோப்பா கவுன்சிலின் பாராளுமன்ற சட்டமன்றத்தில் (PACE) ஜேர்மனி ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டது என்று கூறினார். அவரது இந்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
@REUTERS/Lisi Niesner/File Photo
வெளியுறவு அமைச்சர் வேலைக்கு அவர் தகுதியானவர் அல்ல என Bundestag கட்சியின் முன்னாள் தலைவரான Sahra Wagenknecht தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த அறிக்கையை வெளியிட்டதால் அன்னலெனா முழுமையான அரசியல் பைத்தியம் என ஜேர்மன்-ஹங்கேரிய சங்கத்தின் தலைவரான ஜெர்ஹார்ட் பாப்கேவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜேர்மனி மக்களின் பாதுகாப்பு
மேலும், ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸ் இதற்காக உடனடி விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும், அவரது போர் பிரகடனத்திற்கு அன்னலெனா தனது அரசாங்கத்தின் ஆணையைக் கொண்டிருக்கிறார், ஜேர்மன் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்றும் எம்.பி செலிம் டாக்டெலன் கூறியுள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை. எனினும், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையானது, ஐரோப்பிய அமைதி மற்றும் ஒழுங்குக்கு எதிரான போர் என்றும், அன்னலெனா இதைத்தான் குறிப்பிடுகிறார் என்றும் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.