400 பேர் பலியான சம்பவம்! வன்முறைக்கு காரணமானவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்..ஜேர்மன் வெளியுறவு அமைச்சர்

Iran
By Sivaraj Dec 12, 2022 03:11 PM GMT
Report

ஈரான் மீதான புதிய ஐரோப்பிய ஒன்றிய தடைகள் நாட்டின் புரட்சிகர காவலர்களை குறிவைக்கும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.

ஈரானில் போராட்டம்

ஈரானின் தெஹ்ரான் நகரில் கடந்த மாஷா அமினி என்ற இளம்பெண் பொலிஸார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கிளர்த்தெழுந்த மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

400 பேர் பலியான சம்பவம்! வன்முறைக்கு காரணமானவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்..ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் | German Foreign Minister Said Eu Sanctions On Iran

@AFP via Getty Images

மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நிலையில், சிலருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக மொஷென் ஷெகாரி என்ற நபர் தூக்கிலிடப்பட்டார்.

தூக்கிலிடப்பட்ட இரண்டாவது நபர்

இதனையடுத்து, இரண்டு பாதுகாப்பு படைவீரர்களை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஜித்ரிசா ரஹ்நவர்டு/Majidreza Rahnavard

@Twitter

ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்கியதால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட உள்ளது. இதற்காக பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ஜேர்மன் அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கலந்துகொண்டார்.

400 பேர் பலியான சம்பவம்! வன்முறைக்கு காரணமானவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்..ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் | German Foreign Minister Said Eu Sanctions On Iran

@AFP Photo

கூட்டத்திற்கு முன்னதாக அவர் கூறுகையில், 'இதுபோன்ற மரண தண்டனைகள் மக்களை அச்சுறுத்தும் ஒரு அப்பட்டமான முயற்சி ஆகும். குற்றங்களை செய்ததற்காக அல்லாமல், தங்கள் கருத்துக்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்வதற்காகவும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் போராடும் மக்கள் இந்த மரண தண்டனைகள் மூலமாக அப்பட்டமாக அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்தத் தடைகளின் தொகுப்பின் மூலம், அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு காரணமான மற்றும் இந்த மரண தண்டனைகளுக்குப் பொறுப்பானவர்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்.

இவர்கள் குறிப்பாக புரட்சிக் காவலர்கள் ஆனால், கட்டாய வீடியோக்கள் மூலம் மக்களை அச்சுறுத்த அல்லது மேலும் தண்டிக்க முயற்சிக்கும் நபர்களும் இவர்கள் தான்' என தெரிவித்துள்ளார்.     

அன்னலெனா பேர்பாக்/Annalena Baerbock

@Reuters

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US