ஒருவழியாக... குடியுரிமைச் சட்டத்தின் மறுசீரமைப்புகளை ஏற்றுக்கொண்டது ஜேர்மன் அரசு
ஜேர்மன் அரசு ஒருவழியாக, குடியுரிமைச் சட்டத்தின் மறுசீரமைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளது. கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி, இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை மறுசீரமைப்பு மசோதாவை நேற்று ஜேர்மன் அமைச்சர்கள் அங்கீகரித்துவிட்டனர்.
வாக்கெடுப்பு வெற்றி
நேற்று மாலை கேபினட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒன்றில், அமைச்சர்கள் மறுசீரமைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், அந்த சட்டவரைவு ஜேர்மன் நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவேண்டியுள்ளது.
Photo: picture alliance/dpa
உள்துறை அமைச்சர் பெருமிதம்
ஏழு ஆண்டுகளாக குடியுரிமைச் சட்டம் தொடர்பில் முடிவில்லா விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், ஒருவழியாக, கடைசியாக, நாம் ஒரு நவநாகரீக குடியுரிமைச் சட்டத்தை உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Nancy Faeser.
Photo: picture alliance/dpa
இந்த சட்டம், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமையை மட்டுமல்ல, பல குடியுரிமைகள் வைத்திருப்பதையும் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |