காஸா தொடர்பில் ஜேர்மனியின் தயக்கம்... இஸ்ரேலிய கல்வியாளர்கள் விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேல் மீது ஜேர்மனி அழுத்தம் கொடுக்கத் தவறினால், காஸாவில் புதிய அட்டூழியங்கள் ஏற்படக்கூடும் என்று 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச கூட்டணியில் ஜேர்மனி
காஸா தொடர்பில் ஜேர்மனி தலையிட மறுப்பது புதிய அட்டூழியங்களை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது, மட்டுமின்றி அதன் சொந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று இஸ்ரேலிய கல்வியாளர்கள் கடிதம் ஒன்றில் பதிவு செய்துள்ளனர்.
ஜூலை 22 அன்று, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி உறுப்பினர்கள் இருவர், காஸாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருதல், இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுத விநியோகங்களை நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு சர்வதேச கூட்டணியில் ஜேர்மனி சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இதனிடையே காஸாவின் 2 மில்லியன் மக்கள் மீது செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதாபிமான பேரழிவு தொடர்பாக இஸ்ரேல் மீதான தனது விமர்சனத்தை ஜேர்மன் அரசாங்கம் கூர்மைப்படுத்தியுள்ளது.
ஆனால் இதுவரை எந்த பெரிய கொள்கை மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் காஸா மக்களை பட்டினியில் தள்ளும் கொள்கையைக் கொண்டிருப்பதை இஸ்ரேல் மறுக்கிறது, மேலும் ஹமாஸ் படைகள் சரணடைவதன் மூலம் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கூறுகிறது.
வெளிப்படையான நடவடிக்கை
ஆனால், நாஜி படுகொலைக்கான நீடித்த குற்ற உணர்வு, இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் கூட்டுத் திறனை பலவீனப்படுத்துவதன் காரணமாக, போருக்கு ஜேர்மனியின் எதிர்வினை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய கல்வியாளர்கள் உடனடியாக போக்கை மாற்றக் கோருகிறார்கள் என்றால், நாம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதியில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |