ட்ரம்ப்பின் அபத்தமான கோரிக்கை... கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜேர்மன் தொழில்துறை
கிரீன்லாந்தை விற்பனை செய்யுமாறு டென்மார்க் மீது அழுத்தத்தை அதிகரிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டதற்கு, ஜேர்மன் தொழில்துறை கோபத்துடன் எதிர்வினையாற்றியுள்ளது.
பணிய வேண்டாம்
ட்ரம்பின் இந்த அபத்தமான கோரிக்கைகளுக்குப் பணிய வேண்டாம் என்றும் ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவிற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படும் கிரீன்லாந்து தீவை வாங்குவதற்கு அனுமதிக்கும் வரை, ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது தொடர்ச்சியான அதிகரித்த வரிகளை விதிக்க இருப்பதாக ட்ரம்பின் வெளிப்படையான அச்சுறுத்தல், கடந்த கோடையில் பெல்ஜியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
மேலும், ஜேர்மனியின் பொருளாதாரம் ஏற்றுமதியைச் சார்ந்து இருப்பதால், அது வரிகளுக்கு ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது; மட்டுமின்றி ஜேர்மன் பொருளாதாரம் இரண்டு வருட வீழ்ச்சிக்குப் பிறகு மெதுவாக மீண்டு வருகிறது. உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள், கார்கள், இயந்திரங்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற அதன் பொருட்களுக்கான தேவையை பாதித்து வருகிறது.
தற்போது இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விட்டுக்கொடுத்தால், அது அமெரிக்க ஜனாதிபதியை அடுத்த அபத்தமான கோரிக்கையை முன்வைக்கவும், மேலும் கூடுதல் வரிகளை விதித்து மிரட்டவும் மட்டுமே தூண்டும் என ஜேர்மன் பொறியியல் சங்கத்தின் தலைவர் Bertram Kawlath தெரிவித்துள்ளார்.
அதிக சர்ச்சைக்குரிய அரசியல் இலக்குகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் பொருளாதாரத் தடைகளுடன் இணைக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக நிபுணரான Volker Treier தெரிவித்துள்ளார். இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஒரு ஒருங்கிணைந்த பதிலை வலியுறுத்தியுள்ளனர்.

ட்ரம்பால் சனிக்கிழமை விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல், கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுடன் ட்ரம்ப் மேற்கொண்ட தற்காலிக ஒப்பந்தங்களைப் பாழாக்கக்கூடும்.
அமைப்புகள் சந்தேகம்
திட்டமிடப்பட்ட கிரீன்லாந்து வரிகளுக்கு பிரித்தானியாவும் ஒரு இலக்காக உள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாதம் அமெரிக்காவுடன் ஆன ஒப்பந்தத்தின் மீது வாக்களிப்பார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து VDMA மற்றும் DIHK ஆகிய அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
முக்கியமாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீதான பல ஐரோப்பிய ஒன்றிய வரிகளை நீக்குவதை இது உள்ளடக்கியதாகும்.

ஜனவரி முதல் நவம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், ஜேர்மனி அமெரிக்காவிற்கு 135 பில்லியன் யூரோக்களுக்கும் சற்று அதிக மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் குறைவாகும்.
இருப்பினும், அமெரிக்காவே ஜேர்மனியின் முதன்மை ஏற்றுமதி இலக்கு நாடாகத் தொடர்கிறது.2025 ஆம் ஆண்டில் சுங்க வரிகளால் ஏற்பட்டுள்ள இழப்பு 5 பில்லியன் யூரோக்கள் வரை இருக்கும் என்று Volkswagen நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. Mercedes-Benz மற்றும் Porsche நிறுவனங்களும் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |