உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்: ஜேர்மனியில் அதிகரிக்கும் நுகர்வோர் விலைகள்
ஜேர்மனியில் நுகர்வோர் விலைகள் 10.4% சதவிகிதமாக அதிகரிப்பு.
ஜேர்மனியில் செப்டம்பரில் மாதத்தில் ஆண்டு பணவீக்கமானது 10% மாக இருந்தது.
ஜேர்மனியில் நுகர்வோர் விலைகள் அக்டோபர் மாதத்தில் 10.4% சதவிகிதமாக அதிகரித்து இருப்பதாக புள்ளியியல் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
வெள்ளிக்கிழமை பெடரல் புள்ளியியல் அலுவலகம் (Destatis) வெளியிட்ட ஆரம்ப அறிக்கைகளின்படி, ஜேர்மனியில் செப்டம்பரில் மாதத்தில் ஆண்டு பணவீக்கமானது 10% மாக இருந்தது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் ஜேர்மனியின் நுகர்வோர் விலைகள் 10.4% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2022-ல் எரிசக்தி மற்றும் உணவு பொருட்களின் விலை 43% மற்றும் 20.3% அதிகரித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த பொருட்களின் விலை 17.8 % உயர்ந்துள்ளது. சேவைகளின் விலை 4% , வீடுகளின் விலை 1.8% அதிகரித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஹரியின் பட்டத்தை கையகப்படுத்தினார் மன்னர் சார்லஸ்: சுயசரிதை வெளியான மறுநாளே திடீர் அறிவிப்பு
மாதாந்திர அடிப்படையில், அக்டோபர் 2022 இல் நுகர்வோர் விலைகள் 0.9% அதிகரித்து வருகின்றனர்.