ஹரியின் பட்டத்தை கையகப்படுத்தினார் மன்னர் சார்லஸ்: சுயசரிதை வெளியான மறுநாளே திடீர் அறிவிப்பு
ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார்.
சசெக்ஸின் சுயசரிதை விவரங்கள் வெளியிடப்பட்ட மறுநாளே, இளவரசர் ஹரியும் கெளரவ ராணுவ பொறுப்பை ராஜா கையகப்படுத்தினார்.
இளவரசர் ஹரியிடம் இருந்த பறிக்கப்பட்ட ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார்.
சசெக்ஸ் இளவரசரான ஹரி மற்றும் இளவரசியான மேகன் இருவரும் மூத்த அரச குடும்பத்தில் இருந்து விலகிய பிறகு, 2021 பிப்ரவரியில் கமோடார்-இன்-சீஃப் ஆஃப் ஷிப்ஸ் அண்ட் டைவிங் மற்றும் RAF ஹானிங்டனின் கெளரவ விமான தளபதி ஆகிய பட்டங்கள் இளவரசர் ஹரியிடம் இருந்து பறிக்கப்பட்டது.
தற்போது இளவரசி கேட் மிடில்டனுக்கு நாட்டின் ஆலோசகர் என்ற பதவி கிடைக்க இருக்கும் நிலையில், இளவரசர் ஹரியின் ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவி அரச குடும்பத்தின் எந்த உறுப்பினருக்கு அந்த பாத்திரம் வழங்கப்படும் என்பது பற்றிய யுகங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருந்தன.
இந்நிலையில் இளவரசர் ஹரி பதவி வகித்து வந்த ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
கார்ப்ஸ் ஆஃப் ராயல் மரைன்ஸின் 358 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் கேப்டன் ஜெனரலின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் மிகப்பெரிய மகிழ்ச்சி, கடந்த மூன்றரை நூற்றாண்டுகளில் எனது குடும்பத்தின் பல உறுப்பினர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நான் விதிவிலக்காக பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
The cover of Prince Harry's memoir SPARE
மேலும் ராயல் மரைன்கள் நிலத்திலும் கடலிலும் தனித்துவமான மற்றும் இணையற்ற வரலாற்றைக் கொண்டுள்ளனர். உங்களின் தைரியம், உறுதிப்பாடு, சுயக்கட்டுப்பாடு மற்றும் மிகவும் தீவிரமான சூழல்களில் தாங்கும் குறிப்பிடத்தக்க திறன் ஆகியவற்றிலிருந்து நான் மகத்தான உத்வேகத்தை பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: எங்கள் ராஜா அதிர்ஷ்டசாலி…மன்னர் சார்லஸின் உதவியாளருக்கு குவியும் ரசிகர்கள் பட்டாளம்
இதற்கிடையில் 358வது பிறந்தநாளுக்கு எனது இதயப்பூர்வமான மற்றும் சிறப்பு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
டியூக் ஆஃப் சசெக்ஸின் சுயசரிதை விவரங்கள் வெளியிடப்பட்ட மறுநாளே, இளவரசர் ஹரியும் கௌரவ ராணுவ பொறுப்பை ராஜா கையகப்படுத்தும் அறிவிப்பை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.