உலகின் விலையுயர்ந்த உணவு இங்குதான்! 190 நாடுகளை சுற்றிய ஜேர்மன் பிரபலம் கூறிய விடயம்
ஜேர்மனியைச் சேர்ந்த உலகம் சுற்றும் இளைஞர், பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
லூகா பெர்ட்மென்ஜஸ்
ஜேர்மனியின் Monchengladbach நகரைச் சேர்ந்த இளைஞர் லூகா பெர்ட்மென்ஜஸ் (Luca Pferdmenges).
23 வயதான இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் ஆவார். அத்துடன் பல்வேறு நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வமுடையவர்.
உலகம் முழுவதும் 190 நாடுகளில் பயணம் செய்த லூகா, அங்கு அவர் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ரூ.9 க்கு உணவு
தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு லூகா சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்ட ஒரு தட்டு தெரு உணவின் விலை ரூ.9 தானாம். இதுதான் அவர் சாப்பிட்டதில் மலிவான உணவாம்.
வங்காளதேசம் நாட்டிற்கு சதிபுரட்சிக்கு முன்பு சென்ற லூகா குறைந்த செலவில் உணவு சாப்பிட்டுள்ளார். அதேபோல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் உணவுகளும் சிக்கனமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
குறிப்பாக இந்தியாவில் உணவு மிகவும் நன்றாக இருப்பதாக லூகா குறிப்பிடுகிறார். மலிவான விலையில் உணவுகள் கிடைப்பது போல், விலையுயர்ந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியல் குறித்து தெரிவித்துள்ளார்.
அதிக விலையுள்ள உணவு
அவற்றில் சுவிட்சர்லாந்து நாட்டில் உணவு சாப்பிட வேண்டுமென்றால், ஒரு நபருக்கு சுமார் ரூ.2500யில் இருந்து உணவு தொடங்குகிறதாம்.
கேவியர் என்று அழைக்கப்படும் ஒருவகை மீன் முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவுதான் அதிக விலையுள்ள உணவு என்கிறார் லூகா. இதன் விலை இந்திய மதிப்பில் 42,771 ரூபாய் ஆகும். எனினும், இந்த பெலுகா ஸ்டர்ஜன் மீன் முட்டைகள் மற்ற நாடுகளில் வெவ்வேறு விலைகளில் கிடைக்கின்றன.
சுவிட்சர்லாந்துக்கு அடுத்தபடியாக ஐஸ்லாந்து, நார்வே, இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விலையுயர்ந்த உணவுகள் கிடைப்பதாக லூகா தெரிவிக்கிறார்.
இத்தாலிய, ஜப்பானிய மற்றும் அமெரிக்க உணவுகள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானவை என்றும், இந்தியாவில் சமோசா போன்ற உணவுகள் 10, 20 ரூபாய்க்கு எளிதாக கிடைப்பதாகவும் லூகா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |