நேற்று வரை ட்ரம்பை விமர்சித்த ஜேர்மன் தலைவர்... இன்று அந்தர் பல்டி
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை நேற்று வரை விமர்சித்துவந்தார் ஜேர்மன் சேன்ஸலர்.
இன்று, அமெரிக்காவை வாயார புகழ்ந்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்!
நேற்று வரை ட்ரம்பை விமர்சித்த ஓலாஃப் ஷோல்ஸ்
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது மற்றும் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், ஷோல்ஸ் பேசும் விதமே தற்போது மாறிவிட்டது!
அமெரிக்காவை ஜேர்மனியின் நெருங்கிய கூட்டாளி என்று கூறியுள்ள ஷோல்ஸ், மேற்கு ஜேர்மனியில் ஜனநாயகம் மேம்பட்டதில் அமெரிக்காவின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இரண்டு கருத்துகளுக்கும் இடையில் என்ன நடந்தது?
பெரிதாக ஒன்றுமில்லை, இரண்டு முறை ட்ரம்புடன் தொலைபேசியில் பேசினார் ஷோல்ஸ், அவ்வளவுதான்!
மேற்கு ஜேர்மனியில் ஜனநாயகம் மேம்பட்டதில் அமெரிக்காவின் பங்கையும், ஜேர்மனியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நேட்டோ அமைப்பின் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள ஷோல்ஸ், அதனால்தான் நமக்கு அமெரிக்காவுடன் நிலையான உறவு வேண்டும் என்றும், ட்ரான்ஸ் அட்லாண்டிக் உறவுகள் ஜேர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் மிகவும் அவசியமானவை என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ஐரோப்பியர்கள் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளை மதிப்பவர்கள் என்றும், அவற்றில் ஒன்று, எல்லைகள் வலுக்கட்டாயமாக மாற்றப்படக்கூடாது என்பதாகும் என்றும் தெரிவித்துள்ளார் ஷோல்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |