அணு ஆயுதம் தாங்கிய ரஷ்யாவின் செயற்கைக்கோள்: எச்சரிக்கும் ஜேர்மனி
ரஷ்யா அணு ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோளை செலுத்த உள்ளதாக ஜேர்மனி ஊடகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Germany media reports russia preparing nuclear satellite: ரஷ்யா வரும் வாரங்களில், அணு ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளியில் செலுத்தத் தயாராகி வருவதாக ஜேர்மனி ஊடகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அணு ஆயுத செயற்கைக்கோள்
ஜேர்மனிய ஊடகங்களின் கூட்டமைப்பு ஒன்று திங்களன்று செய்தி ரஷ்யா குறித்து வெளியிட்டது.

அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் அணு ஆயுதங்களைத் தாங்கக்கூடிய "Sputnik-S" செயற்கைக்கோளை மாஸ்கோ விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக, ஜேர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறை மற்றும் ஆயுதப் படைகளிடம் தகவல்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த செயற்கைக்கோள் பல ஆண்டுகளாக மாஸ்கோ பெருநகரப் பகுதியில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும், டிசம்பர் மாத தொடக்கத்திலேயே விண்வெளியில் செலுத்தப்படலாம் என்றும், ஜேர்மனியின் பொது ஒளிபரப்பு நிறுவனங்களான WDR, NDR மற்றும் Suddeutsche செய்தித்தாள் ஆகிய ஊடகங்களின்படி தெரிய வருகிறது.
