ஜேர்மனியின் உண்மை முகத்தை போட்டுடைத்த உக்ரைன் தூதர்!
ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதற்கு எதிராக ஜேர்மன் அமைச்சர் இருந்ததாக ஜேர்மனிக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்நது 34வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருதற்கு மத்தியில், இரு நாட்டு பிரதிநிதிகளும் துருக்கி இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாட்டு பிரநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள துருக்கி, இன்னும் சில மணிநேரங்களில் இதுதொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்போம்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு
இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதற்கு ஜேர்மன் நிதியமைச்சர் Christian Lindner எதிராக இருந்ததாக ஜேர்மனிக்கான உக்ரைன் தூதர் Andriy Melnyk தெரிவித்துள்ளார்.
சில மணிநேரங்களில் உக்ரைன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என Christian Lindner கருதினார் மற்றும் உக்ரைனில் ரஷ்யா நிறுவும் பொம்மை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அவர் தயாராக இருந்தார் என Andriy Melnyk தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து Christian Lindner தற்போது வரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.