உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்போம்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு
உக்ரைனின் கீவ் மற்றும் Chernihiv புறநகரில் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா குறைக்கும் என அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் Alexander Fomin அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்நது 34வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருதற்கு மத்தியில், இரு நாட்டு பிரதிநிதிகளும் துருக்கி இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாட்டு பிரநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள துருக்கி, இன்னும் சில மணிநேரங்களில் இதுதொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் Chernihiv-ஐ மையமாக கொண்ட அதன் ராணுவ நடவடிக்கைளை முற்றிலும் குறைக்க ரஷ்ய முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் Alexander Fomin தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அரசு கட்டிடத்தை ஏவுகணைகளால் தாக்கி தவிடுபொடியாக்கிய ரஷ்யா! வீடியோ ஆதாரம்
குறிப்பாக இன்று காலை மற்றும் சமீபத்திய நாட்களில் ரஷ்யா தரப்பிலிருந்து வரும் அறிவிப்புகளை வைத்து பார்த்தால், இது பெரிய முன்னெற்றத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.