ஒரு இரட்டை அற்புதம்... லிஸ்பன் Funicular ரயில் விபத்தில் பலியானதாக கூறப்பட்ட ஜேர்மானியர் உயிருடன் கண்டுபிடிப்பு
லிஸ்பன் Funicular ரயில் விபத்தில் ஒரு இரட்டை அற்புதம் நிகழ்ந்துள்ளது.
ஆம், இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒரு ஜேர்மன் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட விடயம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ள நிலையில், விபத்தில் பலியானதாக கூறப்பட்ட அந்தக் குழந்தையின் தந்தையும் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு இரட்டை அற்புதம்...
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் நகரில் நிகழ்ந்த Funicular ரயில் விபத்தில் ஜேர்மானியர் ஒருவர் தன் மகன் கண்களுக்கு முன்பாக உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜேர்மனியின் ஹாம்பர்கைச் சேர்ந்த அந்த நபரின் குடும்பத்தினர் போர்ச்சுகல் சென்ற நிலையில், அவரது புகைப்படத்தைக் காட்டி பொலிசாரிடம் அவரைக் குறித்து விசாரித்துள்ளார்கள்.
பொலிசார், அந்த புகைப்படத்திலிருப்பது போல் காணப்படும் ஒரு நபர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூற, அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால், அவர் உயிருடன் இருப்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதும் பின்னர் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, அவரது குழந்தை ஆச்சரியத்துக்குரிய வகையில் உயிர் தப்பிய நிலையில், உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட அவரும் உயிருடன் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |