பாகிஸ்தானுக்குச் சென்ற ஜேர்மன் வீராங்கனைக்கு நேர்ந்த துயர முடிவு
ஜேர்மன் விளையாட்டு வீராங்கனை ஒருவர் பாகிஸ்தானில் விபத்தொன்றில் பலியானார்.
ஜேர்மன் வீராங்கனைக்கு நேர்ந்த துயர முடிவு
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஜேர்மன் விளையாட்டு வீராங்கனை லாரா (Laura Dahlmeier, 31), ஜூன் மாத இறுதியில் நண்பர்களுடன் மலையேற்றத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்தார்.
திங்கட்கிழமையன்று 6,069 மீற்றர் உயரமுள்ள Laila Peak என்னும் மலைக்குச் சென்றிருந்தார் லாரா.
அப்போது, அவர் மலையிலிருந்து உருண்டுவரும் பாறைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரது நண்பர்கள் உதவி கோரி சமிக்ஞை அனுப்பிய நிலையில், சாதகமற்ற இயற்கைச் சூழல் காரணமாக லாராவை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று லாரா உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
லாராவின் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜேர்மன் விளையாட்டு வீரர்கள், ரசிகர்களிடையே கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
லாரா, கடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றதுடன், ஏழு உலக சாம்பியன் பட்டங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |