உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்க ஜேர்மன் நாடாளுமன்றம் பச்சை கொடி!
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவதற்கு ஜேர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவது மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
693 எம்.பி-க்களில் 586 பேர் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
100 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர், மற்றும் 7 பேர் வாக்களிக்கவில்லை.
ரஷ்யாவின் ரூபிளுக்கு மாறும் உக்ரைனின் முக்கிய நகரம்! வெளியான அறிவிப்பு
அதேசமயம், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ இருப்புக்கு பலம் சேர்க்கும் வகையில் கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்பப்படும்.
மேலும், ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றி நாடுகளில் புலம்பெயர ஊக்குவிக்கப்படுவார்கள் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, இது போர்ப் பிரகடனத்திற்கு நிகராக இருப்பதாக கூறியுள்ளது.