ரஷ்யாவின் ரூபிளுக்கு மாறும் உக்ரைனின் முக்கிய நகரம்! வெளியான அறிவிப்பு
உக்ரைன் தெற்கில் உள்ள கெர்சன் நகரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தை பயன்படுத்த தொடங்கும் என ரஷ்ய செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது.
கெர்சன் பிராந்தியத்தின் ராணுவ-சிவில் நிர்வாகம் என்று தன்னைக் காட்டிக்கொண்ட ரஷ்ய-சார்பு குழுவின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி RIA செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு நான்கு மாதங்கள் ஆகும் எனவும், அதுவரை உக்ரைனின் ஹிரைவ்னியா உடன் ரூபிள் புழக்கத்தில் இருக்கும் என Kirill Stremousov தெரிவித்துள்ளார்.
சுவிஸின் ஜெனிவாவை விட்டு வெளியேற உக்ரேனிய குடும்பத்திற்கு உத்தரவு!
முன்னதாக, கெர்சன் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிலிருந்து பிரிந்த கிரிமியாவையும் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தையும் இணைக்கும் பகுதியாக இருப்பதால் கெர்சன் மிக முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது.