குடிநீருக்காக போராடத் துவங்கியுள்ள ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்
பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஜேர்மன் நகரமொன்றில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
குடிநீருக்காக போராடும் ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்
பருவநிலை மாற்றம், நீண்ட வறட்சி முதலான பல இயற்கைக் காரணிகள் ஜேர்மனியின் பல பாகங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு வரலாம் என்னும் அச்சத்தை உருவாக்கிவருகின்றன.

இந்நிலையில், பிராண்டன்பர்க் நகரில் டெஸ்லா, ரெட் புல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்துவருகின்றன.
இதற்கிடையில், தாமிரச் சுரங்கம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இவற்றிற்கெல்லாம் அதிக அளவில் தண்ணீர் தேவை.
இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்வதாலும், தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதாலும், மேலும் தண்ணீருக்கு பிரச்சினை ஏற்படலாம் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
வளம் மிக்க பிராண்டன்பர்க் நகரம் வறண்ட நிலமாக மாறிவரும் நிலையில், பல்வேறு இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுடன் இணைந்து குடிநீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |