டிரம்பை நம்ப முடியாது! சுமார் 1,236 டன் தங்கத்தை திரும்ப பெற ஜேர்மனி திட்டம்
டிரம்பின் நடவடிக்கைகளுக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள தங்கத்தை திரும்ப பெற ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜேர்மனியின் தங்க இருப்பு
உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளின் வரிசையில் கிட்டத்தட்ட 3350 டன் இருப்புடன் ஜேர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது.
1945ம் ஆண்டு உலகப்போருக்கு பிறகு, ஜேர்மனி - அமெரிக்கா இடையே நெருக்கமான நட்புறவு இருந்து வருகிறது. இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக ஜேர்மனி தங்களது நாட்டின் தங்க இருப்பில் ஒரு பகுதியை அமெரிக்காவில் சேமித்து வைத்துள்ளது.

அதாவது ஜேர்மனியின் 1,236 டன் தங்கத்தை அதாவது மொத்த தங்க இருப்பில் 37% அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்துள்ளது.
தங்க இருப்பை திரும்ப பெற திட்டம்
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்த வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் கிரீன்லாந்தை கைப்பற்றும் நடவடிக்கை ஆகியவை ஜேர்மனிக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் வரி செலுத்துவோர் சங்க தலைவர் மைக்கேல் ஜோகர், டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது, அவர் அமெரிக்காவின் வருமானத்திற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் ஜேர்மன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி கிரீன் பார்ட்டி, பொருளாதார தன்னிறைவு மற்றும் சர்வதேச சண்டைகளில் இருந்து ஜேர்மனியை பாதுகாத்துக் கொள்வதற்காக வெளிநாட்டின் உள்ள தங்க இருப்பை திரும்பி தாயகம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |