ரஷ்யாவின் மீது புதிய தடைகளை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்: குறிவைக்கப்பட்ட ஊடக பிரபலங்கள்
ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்யா மீது புதிய தடை
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில்(European Council) ரஷ்யாவிற்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கு சார்பாக தகவல் கையாளுதல் நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய 6 நபர்கள் மீது இந்த தடை பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அரசு சார்ந்த கருத்துகளை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊடக பிரபலங்கள் ஐரோப்பாவின் இந்த தடையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, டிமிட்ரி குபெர்னிவ், எகடெரினா ஆண்ட்ரீவா, மரியா சிட்டெல் மற்றும் பாவெல் ஜருபின் ஆகியோர் புதிய தடையில் இடம் பெற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஊடகம் மட்டுமின்றி ரஷ்யாவில் கலைத்துறை செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை நியாயப்படுத்தும் நபர்கள் மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |