வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளராக மாறுகிறார்கள்! மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து
வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக மலேசிய அமைச்சரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய அமைச்சரின் சர்ச்சை கருத்து
மலேசிய அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் சமீபத்தில் தெரிவித்த கருத்தில், வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறி வருவதாக தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அமைச்சர் சுல்கிஃப்லி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது, வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சமூகத்தில் ஏற்படக்கூடிய சில தாக்கங்கள் ஆகியவை ஓரினச்சேர்க்கை உள்பட LGBT சார்ந்த மனநிலையை இளைஞர்களுக்கு ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த தகவல் மிகவும் தவறானது என்று சமூக வலைதளங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |