பயங்கர பனிச்சரிவில் சிக்கிய ஜேர்மானியர்: அதிரவைக்கும் திகில் காட்சிகள்
பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஜேர்மானியர் ஒருவர், பனிச்சரிவில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பயங்கர பனிச்சரிவில் சிக்கிய ஜேர்மானியர்
NEW: German man escapes de*th thanks to his emergency airbag after being swept away down a mountain by an avalanche.
— Collin Rugg (@CollinRugg) February 5, 2025
The incident happened at Mont Blanc, the highest mountain in Europe.
As the man started sliding down the slope, he could be seen inflating his anti-avalanche… pic.twitter.com/LyLWQiw02N
ஐரோப்பாவின் உயரமான சிகரமான Mont Blanc என்னுமிடத்தில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார் ஜேர்மானியர் ஒருவர்.
அப்போது திடீரென பனிச்சறுக்கு ஏற்பட, பனியில் சிக்கிய அவர், சுமார் 300 மீற்றர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காலும், விலா எலும்புகளும் உடைந்து, சுயநினைவின்றிக் கிடந்த அந்த ஜேர்மானியரை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
இந்த திகில் சம்பவம் ஜனவரி மாதம் 29ஆம் நடந்த நிலையில், இந்த காட்சிகளை மற்றொரு பனிச்சறுக்கு வீரர் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த மற்ற பனிச்சறுக்கு வீரர்கள், அந்த ஜேர்மானியர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றே எண்ணினார்களாம்.
ஆக, அப்படியொரு பயங்கர பனிச்சரிவில் சிக்கி அவர் உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |