ஜேர்மனி டிக்டோக் பிரபலம் இந்தியாவில் கைது! நான் பயந்தேன் என பதிவு..என்ன நடந்தது?
இந்தியாவின் பெங்களூரு நகரில் அனுமதியின்றி நடன வீடியோவை படமாக்கியதற்காக ஜேர்மன் டிக்டோக் பிரபலம் கைது செய்யப்பட்டார்.
ஜேர்மன் இளைஞர்
ஜேர்மனியை நோயல் ராபின்சன் (Noel Robinson) என்ற இளைஞர் உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட நடனக் கலைஞர், டிக்டோக் பிரபலம் மற்றும் Content Creator ஆவார்.
தனது துடுப்பான நடன வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற ராபின்சன் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
இவர் பெங்களூருவில் பாரம்பரிய இந்திய உடையான வேட்டியை, துண்டு அணிந்துகொண்டு தெரு நடன வீடியோவை படமாக்கினார்.
இது ஏராளமான மக்களை ஈர்த்தது மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி நடன வீடியோவை படமாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.
சிறைக்கு அனுப்புவார்கள் என்று பயந்தேன்
தகவல்களின்படி, ராபின்சன் சுமார் 15 நிமிடங்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கீகாரமின்றி படம் எடுத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அவர் ஒரு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவதைக் காணலாம்.
பின்னர் அவர் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல் முறை!! அவர்கள் என்னை சிறைக்கு அனுப்புவார்கள் என்று பயந்தேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக எல்லாம் நன்றாக இருந்தது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன், நான் இந்தியாவை நேசிக்கிறேன். வருந்தாதீர்கள் நண்பர்களே! இது எல்லா நாட்டிலும் நடக்கலாம்! இது இந்தியாவைப் பற்றியது அல்ல!! இதுபோன்ற ஒரு சிறிய அனுபவம் இந்தியாவின் மீதான எனது அன்பைப் பறிக்காது" எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |