புகழ்பெற்ற மாயன் கோவிலில் ஏறிய ஜேர்மானியருக்கு அடி உதை
மெக்சிகோவிலுள்ள பிரபல மாயன் கோவிலில் ஏறிய ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஒருவரை மக்கள் அடித்துத் துவைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் ஏறிய ஜேர்மானியர்
வியாழக்கிழமையன்று, மெக்சிகோவில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான மாயன் கோவிலில் ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
🚨 TURISTA SUBE AL CASTILLO DE CHICHÉN ITZÁ DURANTE EL EQUINOCCIO
— Diario de Yucatán (@DiariodeYucatan) March 21, 2025
Un turista ignoró las normas y escaló la pirámide principal de Chichén Itzá en pleno espectáculo de luz y sombra del equinoccio.
Los visitantes, que esperaban el descenso de Kukulkán, quedaron atónitos cuando el… pic.twitter.com/MLzOIVnM1j
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், புண்ணியத்தலமாக கருதப்படுவதுமான அந்த கோவிலில் உள்ள பிரமீடில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் பாதுகாவலர்களை ஏமாற்றிவிட்டு அந்த பிரமீடில் ஏறியதுடன், பிரமீடுக்குள்ளும் சென்றுவிட்டார்.
உடனடியாக அவரை பாதுகாவலர்கள் பிடித்து கீழே கொண்டுவர, அங்கிருந்த மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
மாயன்கள் காலத்தில் அந்த பிரமீடின் உச்சியில் மனிதர்களை பலிகொடுப்பார்களாம். அதேபோல அந்த சுற்றுலாப்பயணியை பலிகொடுக்கவேண்டுமென மக்கள் கோபக்குரல் எழுப்பியுள்ளார்கள்.
அந்த சுற்றுலாப்பயணியின் பெயர் முதலான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |